'மைகிரோமாக்ஸ்' இந்தியாவில் ஸ்மார்ட்போன் மற்றும் மின்தொழில்னுட்ப வர்த்தக சந்தையில் தன் சப் பிராண்ட் 'இன்'('in') மூலம் மீண்டும் கால்பதிக்கிறது .
மைகிரோமாக்ஸ் பிவாடி மற்றும் ஹைதெராபாதில் தனது தொழிற்சாலைகளை கொண்டுள்ளது. இவை மூலமாக ஒரு மாதத்திற்கு 20 லட்சம் முதல் 30 லட்சம் போன்களை 'இன்' பிராண்ட் மூலமாக வெளியிடமுடியும் என கூறுகின்றனர். இது மட்டும் இன்றி இந்நிறுவனத்திற்கு 10000த்திர்கும் மேற்பட்ட கடைகளும் 1000த்திர்கும் மேற்பட்ட பணிநடுவன்களும்(service center) உள்ளன.மைகிரோமாக்ஸின் மறுகால்பதிப்பிற்கு முதலில் 500 கோடி முதலிது செய்யப்போவதாக மைகிரோமாக்ஸ் நிறுவனம் கூறியுள்ளயது.மைகிரோமாக்ஸ் இந்தியாவில் சென்ற வருடங்களில் ஸ்மார்ட்பஹோன் சந்தையில் பரிபாலமாக இருந்தது குறிப்பிடத்தக்கது .
மைகிரோமாக்ஸ் தனது முதல் தயாரிப்பாக 'மைகிரோமாக்ஸ் இன் 1' (MICROMAX IN 1) என்ற தயாரிப்பு மட்டுமின்றி 'இன்' நிறுவனத்தை பற்றியும் நவம்பர் 3 அன்று மக்களுக்கு தெரிவிக்கப் போவதாக செய்திகள் வெளிவந்துள்ள.
இந்திய நிறுவனத்தின் இந்தியாவில் தயாரான போன் என மைகிரோமாக்ஸ் தனது தயாரிப்பை வெளியிடுவது மிகச்சிறந்த ஒன்று மட்டுமின்றி மக்கள் இடத்தில் மிகச்சிறந்த வரவேற்பையும் இது பெரும் என்று எதிர்பார்க்கபடுகிறது.