நம் இந்தியாவில் சென்ற மாதகங்களில் பப்ஜி மற்றும் பப்ஜி-லைட் தடைசெய்யப்பட்டது.இதன் மாற்றாக "என்-கோர் கேம்ஸ்" என்னும் இந்திய நிறுவனம் பப்ஜிக்கு மாறாக "எப்ஏயூ-ஜி" என்னும் புதிய நிகழ்நிலை விளையாட்டை வெளியிட போவதாக செய்திகள் எழுந்த வண்ணம் இருந்தன.அதற்க்கு பதில் அளிக்கும் விதமாக பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் ஞாயிற்றுக்கிழமை அன்று எப்ஏயூ-ஜியின் முதல் கண்ணோட்டய் வெளியிட்டார்.
எப்ஏயூ-ஜியின் முதல் நிலையாக கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் நடந்த கைகலப்பு சண்டையை அடிப்படையாக கொண்டது என என்-கோர் கேம்ஸ் கூறியுள்ளது
இந்த கேம் ஆனது இந்தியாவின் திறமையான நிகழ்நிலை விளையாட்டுவீர்களின் கவனத்தை ஈர்க்கும் எனவும்,பப்ஜி விளையாத்தில் ஈர்ப்புடன் இருப்பவர்களுக்கு நல்ல ஒரு மாற்றக இருக்கும் எனவும் என்-கோர் கேம்ஸின் துணை நிறுவனர்,விஷால் கொண்டால் கூறியுள்ளார்எப்ஏயூ-ஜி தேச பற்றை வளர்க்கும் விதமாக இருக்கும் எனவும் செய்திகள் வெளிவந்துள்ளன.
சீனா நாட்டின் நிகழ்நிலை விளையாட்டுகள் பிரபலம் ஆனதாக இருந்தாலும் அதற்கு மாற்றாக நம் நாட்டின் நிகழ்நிலை விளையாட்டுகள் இருக்கும் என நம்பப்படுகிறது.இவ்வாறு நடக்கையில் நிகழ்நிலை விளையாட்டு வர்த்தகத்தில் இந்தியாவிர்க்கு தனி இடம் அமையும்.