கூகிள் மற்றும் மைக்ரோசாப்ட் தங்களது கிளவுட் கேமிங் கன்சோல்கலை பரிபாலமாக்கி வருகிறது.இவை மூலமாக எந்த வகை வீடியோ கேம் ஆகா இருந்தாலும் கன்சோல் மூலமாக விளையாட முடியும்.
இவைகளுக்கு இணையாக இல்லாவிட்டாலும் முகநூல் நிறுவனமானது முகநூல் கேமிங் தலத்தில் பெரிய விளையாட்டுகளை விளையாடும்படி செய்த்துள்ளது. ஆண்ட்ராய்டு போன்களில் விளையாட்டுகளை பதிவிறக்கம் செய்யாமல் நேரடியாக விளையாடும்படியாக முகநூல் புதிதாக அமைத்துள்ளது விளையாட்டு பிரியர்களின் கவனத்தை ஈர்க்கும் என எதிர் பார்க்கபடுகிறது.
இந்த செயல்திறன் ஆனது ஆண்ட்ராய்டு போன்களில் மட்டுமே காண முடியும் எனவும். ஐபோன்களில் தற்போதைக்கு இந்த செயல்திறனை பயன்படுத்த இயலாது எனவும் முகநூல் நிறுவனம் கூறுகிறது.ஐபோனில் செயலிகளை பதிவிறக்கம் செய்ய பயன்படும் பயன்பாட்டு சந்தையில் குறிப்பிட்டுள்ள விதிமுறைகள் சிலவற்ரை இந்த செயல்திறன் மீறுவதால் கிளவுட் கேமிங் செயல்திறனை ஐபோனில் பயன்படுத்த இயலாது.இதற்கு பதிலாக மற்றொரு செயல்திறனை விரைவில் வெளியிட போவதாக முகநூல் நிறுவனம் கூறியுள்ளது.
முகநூலின் கிளவுட் கேமிங் செயல்திறனில் முதலில் சேர்த்த விளையாட்டுகள்
- அஷ்பால்ட் 9 லெஜெண்ட்ஸ்
- பிஜிஏ டூர் கோல்ப் ஷூடௌட்